"கூட்டணி தொடர்பான கருத்துக்கள் பொதுவெளியில் தெரிவிக்க வேண்டாம்"- தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்

திமுக காங்கிரஸ், கூட்டணி தொடர்பான கருத்துகளை இரு கட்சியினரும் பொது வெளியில் தெரிவிப்பதை கட்டாயம் தவிர்த்திட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
கூட்டணி தொடர்பான கருத்துக்கள் பொதுவெளியில் தெரிவிக்க வேண்டாம்- தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்
x
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தம்மை சந்தித்ததை சுட்டிக்காட்டிய அவர், கூட்டணி தொடர்பாக ஏதோ ஒரு சில இடங்களில் இரு தரப்பிற்கும் ஏற்பட்ட சில நிகழ்வுகளை முன் வைத்து- இரு தரப்புமே இந்த விவாதத்தை பொதுவெளியில் நடத்திக் கொண்டிருப்பது, சிலருக்கு அசை போடுவதற்கான  செயலாக அமைவதை தாம் சிறிதும் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.   விரும்பத்தகாத இத்தகைய விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், இனியும் இவ்வாறு ஏற்பட அனுமதிக்கக் கூடாது என்பதாலும், கூட்டணி குறித்த கருத்துக்களை இரு கட்சியினரும் பொது வெளியில் தெரிவிப்பதை கட்டாயம் தவிர்த்திடுமாறும் ஸ்டாலின், வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.  


Next Story

மேலும் செய்திகள்