சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு : கைதான இருவரிடம் தக்கலையில் விசாரணை

எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைதான அப்துல் சமீம் மற்றும் தவுபீக் ஆகிய இருவரிடமும் தக்கலை காவல்நிலையத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு : கைதான இருவரிடம் தக்கலையில் விசாரணை
x
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8ஆம் தேதி இரவு, சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை 2 பேர் சுட்டு கொலை செய்தனர். இந்த வழக்கில், அப்துல் சமீம் மற்றும் தவுபீக் ஆகிய இருவர், கர்நாடக மாநிலம், உடுப்பியில் கைது செய்யப்பட்டனர். தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட அவர்கள், இன்று காலை 5.15 மணியளவில் களியக்காவிளை காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கிருந்து தக்கலை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்ற குமரி மாவட்ட போலீசார், அங்கு விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழ்நாடு சிறப்பு கமாண்டோ படையை சேர்ந்த 21 பேர் கொண்ட குழு, தக்கலை காவல் நிலையத்தில் துப்பாக்கி ஏந்தி காவலில் ஈடுபட்டுள்ளனர். குழித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ள நிலையில், பாதுகாப்பு கருதி அப்துல் சமீம் மற்றும் தவுபீக் ஆகிய இருவருக்கும், பத்மாநாபபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர்களை கொண்ட மருத்துவ குழுவினர், மருத்துவ பரிசோதனை செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது சமர்ப்பிக்கப்படுவதற்கான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.  


Next Story

மேலும் செய்திகள்