பொங்கல் விடுமுறையையொட்டி குவிந்த மக்கள், களைகட்டிய சுற்றுலா பொருட்காட்சி

பொங்கல் விடுமுறையையொட்டி, ஏராளமான மக்கள் குவிந்ததால் சென்னை தீவுத்திடல் சுற்றுலா பொருட்காட்சி களை கட்டியது.
பொங்கல் விடுமுறையையொட்டி குவிந்த மக்கள், களைகட்டிய சுற்றுலா பொருட்காட்சி
x
ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில், சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. 46 வது ஆண்டாக நடைபெற்று வரும் பொருட்காட்சியை காண நாள்தோறும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பொங்கல் விடுமுறை கொண்டாட்டத்தை ஒட்டி, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் மக்கள் குவிந்ததால் கண்காட்சி களை கட்டியது. அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு அரங்குகளை பார்வையிட்டதுடன், அங்குள்ள ராட்டினங்கள், விளையாட்டு சாதனங்கள் ஆகியவற்றில் ஏறி மக்கள் உற்சாகமாக வலம் வந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்