முதலீட்டு வழிகாட்டுதல் அனுமதி உயர் மட்ட குழு கூட்டம் : முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் முதலீட்டு வழிகாட்டுதல் மற்றும் ஒற்றை சாளர அனுமதிகளுக்கான உயர் மட்ட குழு இரண்டாவது கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
முதலீட்டு வழிகாட்டுதல் அனுமதி உயர் மட்ட குழு கூட்டம் : முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை
x
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  தலைமையில் முதலீட்டு வழிகாட்டுதல் மற்றும் ஒற்றை சாளர அனுமதிகளுக்கான உயர் மட்ட குழு இரண்டாவது கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. 

கடந்த நவம்பர் மாதம் முதல் தேதி நடைபெற்ற கூட்டத்தில் 8 ஆயிரத்து 120 கோடி ரூபாய் முதலீட்டில் 16 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கிடும் வகையில் 21 தொழில் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இந்நிலையில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற இரண்டாவது கூட்டத்தில், 15 தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டன. இதன்மூலம் 6 ஆயிரத்து 608 கோடி ரூபாய் அளவிற்கு தொழில் முதலீடுகள் முழுமையான செயல்பாட்டிற்கு வந்து, 6 ஆயிரத்து 763 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு உருவாகும் வாய்ப்பு உறுதியாகி உள்ளதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இத்திட்டம் தூத்துக்குடி, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, திருச்சி, உள்ளிட்ட இடங்களில் செயல்படுத்தப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,  அமைச்சர்கள் எம்சி.சம்பத், கருப்பணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்