"தமிழகம் - தெலங்கானா இடையே பாலமாக இருப்பேன்" - தமிழிசை சவுந்திரராஜன்

தமிழகம் மற்றும் தெலங்கானா இடையே பாலமாக இருப்பேன் என அந்த மாநில ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் - தெலங்கானா இடையே பாலமாக இருப்பேன் - தமிழிசை சவுந்திரராஜன்
x
தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருதுகளை வழங்கிய, பின்னர் மேடையில் பேசும் போது இவ்வாறு கூறினார். பெருமைமிகு ஆளுநராக தெலுங்கானா- வில் இருந்தாலும், தாம் தமிழகத்தின் மகள்தான் என்றார்.  தூத்துக்குடி தம் மனதில் உள்ளதாக குறிப்பிட்ட அவர், தென் பகுதியின் மகளாகவே, நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன் என்றார். தெலங்கானாவில் உள்ள சுற்றுலா, தொழில், நீர் நிலை ஆகியவைகளை தமிழகத்திற்கு கொண்டு வருவது குறித்து ஆராய்ந்து வருவதாக கூறிய தமிழிசை  அதை, தூத்துக்குடிக்கு எப்படி கொண்டு வருவது என்று சிந்தித்து வருவதாக தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்