சென்னையில் "ஸ்மார்ட் கம்பங்கள்" அமைக்கும் பணி துவக்கம் - ஸ்மார்ட் கம்பிகளின் சிறப்பு அம்சங்கள்

சென்னை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அதிநவீன வசதிகளுடன் ஸ்மார்ட் கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன் சிறப்பம்சங்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
x
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

அதன் ஒரு பகுதியாக மக்கள் அதிகமாக கூடும் மெரினா, பெசன்ட் நகர், தி.நகர் உள்ளிட்ட இடங்களில் ஸ்மார்ட் கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

இந்த கம்பங்களில் இருந்து கிடைக்கும் தகவல்களை கண்காணிக்க சென்னை மாநகராட்சி அலுவலகத்தில், 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட உள்ளது.

குற்றச்செயல்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்கும் வகையில் 360 டிகிரி சுழன்று கண்காணிக்கக் கூடிய கேமிரா மற்றும் மழைமானி, எந்தெந்த பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் பல்வேறு சிறப்பம்சங்கள்,  இந்த ஸ்மார்ட் கம்பத்தில்  இருப்பதாக கூறுகிறார் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்....


நடைபாதைகளை யாரேனும் ஆக்கிரமித்தால் இந்த ஸ்மார்ட் கம்பங்கள் தானியங்கியாக செயல்பட்டு, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கும் எனவும் அவர் கூறுகிறார்.

இதன் மூலம் மாநகராட்சிக்கு ஏற்படக்கூடிய செலவுகளும் கணிசமாக குறைய வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார். 

முதற்கட்டமாக சென்னையில் 50 இடங்களில் இந்த ஸ்மார்ட் கம்பங்கள் பொருத்தப்பட உள்ளதாகவும், விரைவில் 15 மண்டலங்களிலும் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்