அரசு பள்ளிகளில் காலை உணவா? - வதந்தி என அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு

"பொங்கல் விடுமுறை - முதல்வருடன் ஆலோசித்து முடிவு"
x
அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படும் என இணையதளங்களில் பரவும் செய்தி வதந்தி என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிபாளையம் அருகே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட பூங்காவை அவர்  திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏழை மாணவர்களின் தேர்வு கட்டண ரத்து குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்தார். பொங்கலுக்கு வரும் 13-ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவது குறித்து முதலமைச்சருடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்றும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்