விவசாயத்தின் எதிர்காலத்தை காக்கும் முயற்சி - இயற்கை விவசாயம் செய்யும் பள்ளி மாணவ மாணவிகள்

கோவை பிரஸ்காலனியில் பொங்கல் விழாவிற்காக தாங்களே விதைத்த நெல்லை பள்ளி மாணவ , மாணவிகள் அறுவடை செய்துள்ளனர்.
x
விவசாயம் இன்று கேள்விக்குறியாக மாறியுள்ள 
நிலையில், வயிற்று பசியை ஆற்றும் விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்வுபூர்வமாக உணர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் விவசாயம் செய்து அசத்தியுள்ளனர்... 

கோவை பிரஸ்காலனியில் உள்ள  தனியார் பள்ளியில் 
வேளாண் அறிவியல் என்ற சிறப்பு பாடப்பிரிவின் கீழ் மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் குறித்து பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

பள்ளியில் படிக்கும் பதினோறாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவிகள் 32 பேர் சேர்ந்து, பள்ளி வளாகத்தில் உள்ள 12 சென்ட் நிலத்தில் டி.கே.எம் 13 வகை நெல்லை விதைத்துள்ளனர். 

கரிம உரங்களை மட்டுமே பயன்படுத்தி மாணவர்களால் வளர்க்கப்பட்ட அந்த நெல் நான்கு மாதங்களுக்கு பிறகு தற்போது அறுவடை செய்யப்பட்டுள்ளது. 

இந்த நெல் கொண்டே பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். 

பள்ளி வளாகத்தில் மாடி தோட்டம், பிறகு சிறு தோட்டம், விதைகளை சேகரித்தல், மண் புழு உரம் தயாரித்தல் என படிப்படியாக இயற்கை விவசாயத்தை கற்று வந்த மாணவர்கள், இன்று 250 கிலோ நெல்லை அறுவடை செய்து அசத்தியுள்ளனர். 


அரிவாள் வைத்து நெல் கதிர்களை அறுவடை செய்து,  அதனை கட்டி தலையில் வைத்து மாணவ மாணவிகள் பள்ளிக்கு நெல்லை கொண்டு வந்த காட்சி, எதிர்காலத்தில் விவசாயம் மீண்டும் உயிர்தெழும் என்பதை பரைசாற்றும் வகையில் அமைந்தது. 



Next Story

மேலும் செய்திகள்