குடிசை பகுதி மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தகவல்

சென்னை மாநகரில் வசிக்கும் குடிசை பகுதி மக்களுக்கு, பல்வேறு இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டு வருவதாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
குடிசை பகுதி மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தகவல்
x
சென்னை மாநகரில் வசிக்கும் குடிசை பகுதி மக்களுக்கு, பல்வேறு இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டு வருவதாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திமுக உறுப்பினர் சேகர்பாபு எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், சென்னை மாநகரில் உள்ள குடிசைப் பகுதிகளில் 14 ஆயிரத்து 857 குடும்பங்கள் வசித்து வருவதாகவும், அவர்களில், 10 ஆயிரத்து 740 குடும்பங்கள் பெரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். சத்தியவாணி முத்து நகர், கூவம் நதிக் கரைகளில் 2 ஆயிரத்து 92 குடும்பங்கள் வசித்து வருவதாகவும், இவர்களில் 120 குடும்பங்கள் முதலில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்