கல்பாக்கம் அணுமின் நிலைய பராமரிப்பு பணி : 13 ஆம் தேதி வரை மின் உற்பத்தி நிறுத்தம்
சென்னையை அடுத்த கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 2 வது அணு உலை பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட உள்ளதால், மின் தட்டுப்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையை அடுத்த கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 2 வது அணு உலை பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட உள்ளதால், மின் தட்டுப்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணுமின் நிலையத்தில் முதலாவது அணு உலை தொழில்நுட்ப கோளாறு காரணமாக 2018 ஆம் ஆண்டு முதல் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இரண்டாவது அணு உலை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், வரும் 13 ஆம் தேதி வரை மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து மின் தட்டுப்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு அலகிலும் தலா 220 மெகாவாட் அணுமின் உற்பத்தி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story