சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை உட்பட ஏழு மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
x
சென்னை உட்பட ஏழு மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம்,கடலூர்,நாகை,
விழுப்புரம் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக  குறிப்பிட்டுள்ளது. மழையின் தாக்கம் குறைந்து , அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை  விடைபெறும் என எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்