திமுகவுடன் கை கோர்த்த பாமக ஒன்றிய கவுன்சிலர் - பதவி ஏற்பு விழாவின் போது கூட்டணி மாறியதால் பரபரப்பு

பூந்தமல்லி ஒன்றியத்தில் வெற்றி பெற்ற பாமக கவுன்சிலர் திமுகவுடன் கைகோர்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திமுகவுடன் கை கோர்த்த பாமக ஒன்றிய கவுன்சிலர் - பதவி ஏற்பு விழாவின் போது கூட்டணி மாறியதால் பரபரப்பு
x
பூந்தமல்லி ஒன்றியத்தில் வெற்றி பெற்ற பாமக கவுன்சிலர் திமுகவுடன் கைகோர்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பூந்தமல்லி ஒன்றியத்தில் மொத்தம் 28 கிராம ஊராட்சிகளும்,15 ஒன்றிய வார்டுகளும் உள்ளது. இதில் 28 கிராம ஊராட்சிகளிலும் திமுக ஆதரவு வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அதேபோல் ஒன்றியத்தில் உள்ள 15 வார்டுகளில் 10 இடங்களில் திமுகவும், 3 இடங்களில் அதிமுக மற்றும் தலா ஒரு இடத்தில் பாமக மற்றும் சுயேட்சை ஒருவரும் வெற்றி பெற்றார். பதவியேற்பு விழா இன்று நடைபெற்ற நிலையில் பாமக கவுன்சிலர் தன் கூட்டணி கட்சியான அதிமுகவை விட்டுவிட்டு திமுகவுடன் கை கோர்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்