வாக்கு எண்ணிக்கை தொடர்பான சிசிடிவி காட்சிகள் - தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பான சி.சி.டி.வி. பதிவுகளை தாக்கல் செய்ய தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை தொடர்பான சிசிடிவி காட்சிகள் - தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு
x
நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக கூறி 10க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் ரவீந்திரன் மற்றும் துரைசுவாமி அமர்வு முன்பு முறையிட்டனர். 
பல இடங்களில் தேவையின்றி மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டதாகவும், இருவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்று அளிக்கப்பட்டதாகவும் வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து நீதிபதிகள் இது போன்ற முரண்பாடுகள் உண்மையாயின், அவை தேர்தலின் நோக்கத்தை சிதைக்கும் எனக்கூறி, வாக்கு எண்ணிக்கையின் சிசிடிவி பதிவுகள் சமர்ப்பிக்கப்பட்டதா? என கேள்வி எழுப்பினர். அதற்கு, வாக்கு எண்ணிக்கை 2 நாட்கள் நடைபெற்றதாகவும், பதிவுகளை தரவிறக்கம் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறி, சிசிடிவி பதிவுகளை சமர்ப்பிக்க, அரசுத்தரப்பில் இருந்து கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டது. வாதங்களை தொடர்ந்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வரம்பிற்குட்பட்ட 13 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் சிசிடிவி பதிவுகளை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மதியம் 1 மணிக்கு விசாரணைக்கு எடுப்பதாக கூறி வழக்கை ஒத்தி வைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்