"குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து ஆளுநர் உரை புறக்கணிப்பு" - ஸ்டாலின்

குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
x
தமிழக சட்டப்பேரவையின் 2020ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர், இன்று துவங்கியது. கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே திமுக , காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதன் பின்பு சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலை குறித்து அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியும் ஆளுநர் எந்த முடிவும் எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினர். தமிழகத்தின் கடன் 4 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது எனவும் , இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை என்றும் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்