"கிருஷ்ணகிரியில் தர்பார் படத்தின் ரசிகர்கள் சிறப்புக்காட்சி வெளியிட தடை"

கிருஷ்ணகிரியில் உள்ள திரையரங்குகளில் ரசிகர்கள் சிறப்புக்காட்சி வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரியில் தர்பார் படத்தின் ரசிகர்கள் சிறப்புக்காட்சி வெளியிட தடை
x
கிருஷ்ணகிரியில் உள்ள திரையரங்குகளில் ரசிகர்கள் சிறப்புக்காட்சி வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் கடந்த அக்டோபர் மாதம் பிகில் திரைப்பட வெளியீட்டின்போது வன்முறை வெடித்த நிலையில், அங்குள்ள திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் ரசிகர் மன்றத்தினர் உடன், கிரிஷ்ணகிரி டிஎஸ்பி குமார் ஆலோசனை மேற்கொண்டார். இதில், கிருஷ்ணகிரி மற்றும் காவேரிப்பட்டணத்தில் உள்ள 10 திரையரங்குகளில் ரசிகர்மன்ற சிறப்பு காட்சி வெளியிட தடை விதிக்கப்பட்டது. மேலும், அரசு அனுமதிக்க கூடிய காட்சிகளை மட்டுமே திரையிட வேண்டும் எனவும் திரையரங்குகளுக்கு அறிவுத்தப்பட்டது. இதனால், வரும் 9ஆம் தேதி ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் சிறப்புகாட்சியை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்