நெற்பயிர்களில் புகையான் நோய் தாக்குதல் - 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் புகையான் நோய் தாக்குதலால் சுமார்10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன.
x
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் புகையான் நோய் தாக்குதலால் சுமார்10 ஆயிரம் ஏக்கர்  நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. நெற்பயிற்கள் கதிர் முற்றி வரும் பருவத்தில், புகையான் நோய் தாக்குதல் காணப்படுவதால் விவசாயிகள் கடும் கவலை அடைந்துள்ளனர்.  ஏக்கருக்கு 30 மூட்டை நெல் அறுவடையாகும் சூழலில், தற்போது 2 மூட்டைகூற அறுவடை செய்ய முடியாது என வேதனை அடைந்துள்ளனர். இதனால் பாதிகப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம்  வழங்க வேண்டும் என்றும், பயிர் காப்பீட்டு தொகை அளிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்