அடுத்த தமிழக பா.ஜ.க தலைவர் யார்? - புதிய தலைவராக குப்புராம் தேர்வாக வாய்ப்பு

தமிழக பா.ஜ.கவின் புதிய தலைவராக குப்புராம் தேர்வு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
x
தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த தமிழிசை, கடந்த ஆகஸ்ட் மாதம், தெலங்கானா ஆளுநராக பொறுப்பேற்றார். இதையடுத்து, கடந்த மூன்று மாதங்களாக மாநில தலைமை இன்றி பா.ஜ.க இயங்கி வருகிறது. இந்நிலையில், தமிழக பா.ஜ.கவின் அடுத்த தலைவர் தேர்வு குறித்து மாநில நிர்வாகிகளின் கருத்துகளை கேட்பதற்காக மேலிடப் பார்வையாளர் ஜெயபிரகாஷ் தலைமையிலான குழு இன்று சென்னை வந்துள்ளது. தியாகராயநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெறும் கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், கட்சியின் மூத்த தலைவர்களுடன் இந்த குழு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் புதிய தலைவரை கட்சி மேலிடம் அறிவிக்கும் என கூறப்படுகிறது. இதற்கிடையே, கட்சியின் துணைத் தலைவரான குப்புராமுக்கு புதிய தலைவராகும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Next Story

மேலும் செய்திகள்