ஒப்பந்ததாரர் வீட்டில் ரூ.20 லட்சம் மதிப்பிலான ஆவணங்கள் கொள்ளை

மதுரையில் துப்பாக்கி முனையில் ஒப்பந்ததாரர் வீட்டில் 170 சவரன் நகை மற்றும் 20 லட்சம் மதிப்பிலான ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒப்பந்ததாரர் வீட்டில் ரூ.20 லட்சம் மதிப்பிலான ஆவணங்கள் கொள்ளை
x
மதுரை கூடல்புதூர் அருகே அப்பாத்துரை முதல்தெரு பகுதியில், அரசு ஒப்பந்ததாரரான சோலை குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டிக்கு வந்த மர்ம நபர்கள், தங்களை வருமானவரி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் என அறிமுகம் செய்து கொண்டு அனைத்து ஆவணங்களையும் சரிபார்ப்பதாக கூறி ஆவணங்களையும், தங்க நகைகள், மற்றும் பணத்தையும் வெளியில் எடுத்து வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து, அனைத்தையும் வெளியில் எடுத்துவைத்த போது,  அந்த மர்ம நபர்கள்,  தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி, 170 சவரன் தங்க நகை,  2.8 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்து சென்றனர். இதனையடுத்து செய்வதறியாது திகைத்த குணசேகரன், மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதைதொடர்ந்து, கொள்ளை தொடர்பாக, கூடல்புதூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  ஒப்பந்தகாரர் சோலை குணசேகரன், அதிமுக மாநில நிர்வாகி சோலை ராஜாவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது

Next Story

மேலும் செய்திகள்