நெல்லை கண்ணன் ஜாமீன் மனு தள்ளுபடி

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நெல்லை கண்ணனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
நெல்லை கண்ணன் ஜாமீன் மனு தள்ளுபடி
x
நெல்லை கண்ணனை, ஜாமீனில் விட கோரி திமுக மற்றும் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் நெல்லை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி கடற்கரை செல்வம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறையின் விசாரணை முழுமையாக முடியவில்லை என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு நெல்லை கண்ணன் உடல் நலம் மற்றும் அவரது வயதை காரணம் காட்டி நீதிபதி ஜாமின் வழங்க வேண்டும் என நெல்லை கண்ணன் தரப்பு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து மாலை 6 மணிக்கு தீர்ப்பை வழங்கிய நீதிபதி கடற்கரை செல்வம் போலீசார் விசாரணை இன்னும் முழுமையாக நிறைவடையாத காரணத்தால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்