"ஆளுங்கட்சி அதிகாரத்தை மீறி தி.மு.க. வெற்றி" - ஸ்டாலின்

உள்ளாட்சித் தேர்தலில் ஆளும்கட்சியின் அதிகாரத்தை மீறி தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஆளுங்கட்சி அதிகாரத்தை மீறி தி.மு.க. வெற்றி - ஸ்டாலின்
x
ஆளுங்கட்சியின் தடைகளை மீறி தி.மு.க.கூட்டணி வெற்றி கண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். திமுக மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும், ஆளும்கட்சி மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பும் உள்ளாட்சி தேர்தல் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். உள்ளாட்சித் தேர்தலை முறைப்படி நடத்த வேண்டும் என்பதற்காகவே உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதி மன்றத்திலும் திமுக சார்பில் வழக்கு தாக்கல் செய்ததாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடு, உத்தரவுகள் காரணமாகவே, தமிழக தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தியதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் துணையோடு, திமுகவின் வெற்றியைத் தடுக்க சதி செய்தார்கள், வெற்றியை அறிவிக்கத் தயங்கினார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். திமுக கூட்டணி மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த பெருமக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்