பொங்கல் தேதியை மாற்றிவிடாதீர்கள் - சமூக வலைதளத்தில் ஸ்டாலின் பதிவு
மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் தேதி மாற்றப்பட்டது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் தேதி மாற்றப்பட்டது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் பிரதமரின் உரையை கேட்க மாட்டு பொங்கலன்று மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இதை பூசி மெழுகுவதற்காக ஏதேதோ காரணம் கூறியது அதிமுக அரசு, ஆனால் தற்போது பிரதமர் உரையாடும் தேதி மாற்றப்பட்டுள்ளது. பிரதமருக்கு சேவகம் செய்வதற்காக தொன்மையான பொங்கல் திருநாள் தேதியை மாற்றிவிடாதீர்கள் என தமிழக அரசைக் கேட்டுக் கொள்வதாக ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
Next Story