வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் தயார் - தேர்தல் ஆணையம்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் தயார் - தேர்தல் ஆணையம்
x
தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர, மற்ற மாவட்டங்களில், கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 என இருகட்டங்களாக தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 


வாக்கு எண்ணும் மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, 30 ஆயிரத்து 354 அலுவலர்கள் மற்றும் காவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.மேலும் வாக்குப் பெட்டி வைக்கப்பட்டுள்ள அறைகள் முதல் வாக்கு எண்ணும் வரை அனைத்து பணிகளையும் கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


வாக்கு எண்ணிக்கை முடிவினை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் வலைதளத்தில் உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.வாக்குகள் பணி நேர்மையாகவும், நியாயமாகவும், நடைபெற தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்