களைகட்டிய யானைகள் புத்துணர்வு முகாம் : கோயில் யானைகளுடன் புத்தாண்டை கொண்டாடிய மக்கள்

பார்வையாளர்கள் வருகை அதிகரித்துள்ளதால், கோயில் யானைகள் புத்துணர்வு முகாம் களை கட்டியுள்ளது.
களைகட்டிய யானைகள் புத்துணர்வு முகாம் : கோயில் யானைகளுடன் புத்தாண்டை கொண்டாடிய மக்கள்
x
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் கடந்த மாதம் 15 ஆம் தேதியில் இருந்து கோயில் யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான 28 யானைகள் பங்கேற்றுள்ளன. ஜனவரி 31 ஆம் தேதி வரை நாற்பத்தெட்டு நாட்கள் முகாம் நடைபெற உள்ளது.

உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் புத்துணர்வு பெற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதால், யானைகள் உற்சாகமாக காணப்படுகின்றன. அவற்றின் அன்றாட நடவடிக்கைகளை கண்டுகளிக்க, முகாம் தொடங்கிய நாளில் இருந்தே பார்வையாளர்களின் வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில், பள்ளி விடுமுறை, புத்தாண்டு கொண்டாட்டம் காரணமாக பார்வையாளர்கள் எண்ணிக்கை குவிந்துள்ளது. யானைகளின் செய்கைகள், குறும்பு நடவடிக்கைகளை பார்த்து மக்கள் பரவசமடைந்தனர். Next Story

மேலும் செய்திகள்