நெல்லையப்பர் கோவில் மார்கழி திருவிழா கொடியேற்றம்
நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோவில் மார்கழி திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோவில் மார்கழி திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் காலை, மாலை இரு வேளைகளிலும் தாமிர சபை முன்பு திருவம்பாவை வழிபாடு நடைபெறும். மார்கழி திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலையிலேயே நெல்லையப்பர் கோவில் திறக்கப்பட்டு, சன்னதி முன் உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பத்தாம் நாள் அதிகாலையில் தாமிர சபையில் நடராஜர் திருநடன காட்சியும், ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளது.
Next Story

