தேர்தல் அதிகாரி அறையில் வாக்குச்சீட்டுகள் - அலுவலரை முற்றுகையிட்ட திமுகவினர்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் தேர்தல் அதிகாரி அறையில் வாக்குச்சீட்டுகள் குவித்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் அதிகாரி அறையில் வாக்குச்சீட்டுகள் - அலுவலரை முற்றுகையிட்ட திமுகவினர்
x
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் தேர்தல் அதிகாரி அறையில் வாக்குச்சீட்டுகள் குவித்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த தகவலை தொடர்ந்து, அங்கு சென்ற திமுகவினர் தேர்தல் அதிகாரி குருநாதனிடம் விளக்கம் கேட்டுள்ளனர். அதற்கு  உரிய விளக்கம் அளிக்காததால் அதிகாரியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தேர்தல் அதிகாரி அறையில் இருந்த வாக்குச்சீட்டுகள் அனைத்தையும் தனிஅறையில் வைத்து பூட்டி அந்த அறைக்கு சீல்வைத்தனர். இதனையடுத்து திமுகவினர் கலைந்து சென்றனர். 


Next Story

மேலும் செய்திகள்