மதுரை மாவட்ட ஆட்சியர் காரை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவு

துணைக்கோள் நகரத்திற்கு இடம் வழங்கியவர்களுக்கு உரிய நிவாரண தொகை வழங்காததால், நீதிமன்ற உத்தரவுப்படி, நிலத்தின் உரிமையாளர்கள், மாவட்ட ஆட்சியரின் காரை ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்ட ஆட்சியர் காரை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவு
x
மதுரையில் கடந்த1989ஆம் ஆண்டு துணைகோள் நகரத்திற்காக குடிசை மாற்று வாரியம் மூலமாக, விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்கு உரிய நிவாரண தொகை வழங்கப்படாததை எதிர்த்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் உரிய நிவாரண தொகையை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவை பிறப்பித்து பத்து ஆண்டுகள் கடந்தும் முறையான நடவடிக்கை எடுக்காமல், இரண்டரை கோடி ரூபாய் அளவிற்கு நிலுவையில் வைத்திருந்த காரணத்தால் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அதிகாரி மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியரின் கார் மற்றும் அசையா சொத்துகளை பறிமுதல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்த நிலத்தின் உரிமையாளர்கள், ஆட்சியரின் காரை ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் உரிமையாளர்களை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வரும் பிப்ரவரி மாதம் 15ஆம் தேதிக்குள் அனைத்து இழப்பீடுகளும் முறையாக வழங்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் ஜப்தி நடவடிக்கையை கைவிட்டு சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்