முத்தலாக் கூறி விவாகரத்து செய்த பாஜக பிரமுகர் - கண்ணீர் மல்க நியாயம் கேட்ட பெண்கள்

பணத்தை பறித்துவிட்டு முத்தலாக் கூறிய பாஜக பிரமுகரும் கணவருமான வேலூர் இப்ராஹீம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
x
பாஜக பிரமுகரும், அனைத்து ஜமாஅத் தலைவருமான வேலூர் இப்ராஹிம் மீது சர்தாஜ் பேகம் என்பவர் முத்தலாக் சட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரண்டு குழந்தைகள் உள்ள தன்னை, வேலூர் இப்ராஹீம் 2வது திருமணம் செய்ததாகவும், தன்னிடமிருந்து 4 லட்சம் ரூபாய் முடிந்தவுடன் முத்தலாக் கூறி விவாகரத்து செய்ததாகவும் கூறினார். பல்வேறு காவல் நிலையங்களில் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை என்ற அவர், நியாயம் வேண்டும் என்றார். மேலும், சொந்த சகோதரி வீட்டையே இப்ராஹீம் ஆக்கிரமித்து மிரட்டுவதாகவும் கண்ணீர் மல்க கூறினர். தமக்கு பாதுகாப்பாக உள்ள பி.எஸ்.ஓ. மூலம், இப்ராஹீம் மிரட்டுவதாக கூறிய அவரது சகோதரி, சகோதரியின் மகள், மனைவி ஆகியோர், கூட்டாக வந்து புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்