யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் முகாம் - மௌத் ஆர்கன் வாசித்து கலக்கும் லட்சுமி யானை

மேட்டுப்பாளையம் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமில் மௌத் ஆர்கன் வாசித்து யானை ஒன்று பார்வையாளர்களை வாசித்து வருகிறது.
x
தேக்கம்பட்டி பவானி ஆற்றுப் படுகையில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் முகாம் நடைபெற்று வருகிறது. 28 யானைகள் முகாமில் கலந்துகொண்டுள்ள நிலையில்  அவற்றுக்கு காலை மாலை இரண்டு வேளையும் நடைப்பயிற்சி குளியல் மற்றும் ஷவர் மேடைகளில் ஆனந்த குளியல் அளிக்கப்படுகிறது.

முகாமில் உள்ள இரட்டை திருப்பதி அரவிந்த லோசனார் கோவில் யானை லட்சுமி முகாமில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இலங்கையைத் தாயகமாகக் கொண்ட இந்த யானை 6 வயதாக இருக்கும்போது இந்த அந்த கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. தற்போது 15 ஆண்டுகளாக இங்கு வசிக்கும் இந்த யானை, மற்ற யானைகள் போல் அல்லாமல், சற்று மெலிந்த தேகத்துடன் உயரமாக காட்சியளிக்கிறது. 

இத்தகைய சிறப்புகளை கொண்ட லட்சுமி யானை மவுத் ஆர்கன் வாசித்து காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது. யானை மவுத் ஆர்கன் வாசிக்கும்போது எழும் மெல்லிய இசை தென்றல் காற்றோடு கலந்து நம் மனதை வருடிச் செல்கிறது.

கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் தலையை ஆட்டியும் தும்பிக்கையை தரையில் தட்டியும் அதற்கான பதிலை ஒருவித சமிக்ஞை மூலம் லட்சுமி யானை தெரிவிக்கிறது.   நடைபயிற்சிக்கு பின்னர் யானை லட்சுமி அங்கு உள்ள குடிநீர் குழாயில் தாகம் தீர தண்ணீரைக் குடிக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்