கோவை சிறுமி பாலியல் வழக்கில் முன்பு விசாரித்த அதிகாரி விசாரிக்க எதிர்ப்பு

கோவை சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், மற்றொரு குற்றவாளி குறித்து விசாரிக்க, முந்தைய அதிகாரியை மீண்டும் நியமிக்க கூடாது என எதிர்ப்பு கிளம்பியுள்ளது
கோவை சிறுமி பாலியல் வழக்கில் முன்பு விசாரித்த அதிகாரி விசாரிக்க எதிர்ப்பு
x
கோவை சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், மற்றொரு குற்றவாளி குறித்து விசாரிக்க, முந்தைய அதிகாரியை மீண்டும் நியமிக்க கூடாது என எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மற்றொரு நபரை பிடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த அதிகாரியே மீண்டும் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிறுமியின் தாயார் தரப்பு வழக்கறிஞர், ஏற்கனவே விசாரித்த அதிகாரி மீதே ஒரு விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார். இது தொடர்பாக தலைமை நீதிபதியிடம் முறையிடுவோம் என எச்சரித்த அவர், வேறொரு ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 

Next Story

மேலும் செய்திகள்