தீவுத்திடல் எதிரே உள்ள கூவம் கரையோர வீடுகளை அகற்றும் பணி தீவிரம்

சென்னை தீவுத்திடல் எதிரே கூவம் கரையோரம் உள்ள வீடுகளை அகற்ற குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து, காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
x
சென்னை தீவுத்திடல் எதிரே கூவம் கரையோரம், இரண்டாயிரத்து 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளில் கூலித்தொழிலாளர்கள் பல வருடங்களாக வசித்து வருகின்றனர். 

2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால், இந்த பகுதியில் இருப்பவர்களை அப்புறப்படுத்தி, பெரும்பாக்கம் பகுதியில் குடிசை மாற்று வாரிய வீடுகளில் குடியமர்த்த  சென்னை மாநகராட்சி முடிவு செய்தது.

அதன்படி பெரும்பாக்கம் பகுதியில் வீடுகள் ஒதுக்கப்பட்டு, கூவம் கரையோரம் வீடுகளை காலி செய்து விட்டு அங்கு செல்லுமாறு மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டு அதற்கான கெடு விதிக்கப்பட்டது. 

இந்த கெடுமுடிவடைந்தும், குடியிருப்பு வாசிகள் குடிசைகளை காலி செய்யாததால் இன்று மாநகராட்சி சார்பில் பொக்லைன் இயந்திரங்களை கொண்டு வந்து வீடுகளை அப்புறப்படுத்தினர். 

இந்நிலையில் வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதிமக்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பல வருடங்களாக இங்கு வசித்து வரும் நிலையில், மற்றொரு இடத்திற்கு செல்வதால், வேலைவாய்ப்பு, குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும் என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்