முசிறி அருகே கார், லாரி நேருக்கு நேர் மோதி விபத்து : இருவர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் முசிறி அருகே செவலிங்கபுரம் என்ற இடத்தில் கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
முசிறி அருகே கார், லாரி நேருக்கு நேர் மோதி விபத்து : இருவர் உயிரிழப்பு
x
திருச்சி மாவட்டம் முசிறி அருகே செவலிங்கபுரம் என்ற இடத்தில் கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.கோவில்களில் அலங்கார வேலை செய்யும், காரைக்குடியை சேர்ந்த அழகப்பன் என்பவர் சென்னையில் இருந்து கோவைக்கு தனது குழுவினருடன் சென்றுள்ளார். அப்போது செவலிங்கபுரம் என்ற இடத்தில் சிமெண்ட் ஏற்றுவதற்காக வந்த லாரியுடன், கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்