"உள்ளூர் பிரச்சனைகளை தீர்க்கவே உள்ளாட்சி தேர்தல்" - நடிகை கவுதமி, பா.ஜ.க

உள்ளூர் பிரச்சனைகளை தீர்க்கவே உள்ளாட்சி தேர்தல் என்று நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.
x
உள்ளூர் பிரச்சனைகளை தீர்க்கவே உள்ளாட்சி தேர்தல் என்றும், இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.  கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட காளம்பாளையத்தில் ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி  வேட்பாளர்களை ஆதரித்து நடிகை கவுதமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது  பேசிய கவுதமி, நல்லாட்சி குறியீட்டில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது  நியாமானது என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்