அண்ணா பல்கலை.யை பிரிக்கும் முடிவு : அமைச்சர்கள் அடங்கிய ஆய்வு குழு முதல்கூட்டம் ஜனவரி மாதம்

அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாக பிரிப்பதற்காக அரசு அமைத்த ஆய்வு குழுவின் முதல்கூட்டம் ஜனவரி மாதம் நடைபெற உள்ளது.
அண்ணா பல்கலை.யை பிரிக்கும் முடிவு : அமைச்சர்கள் அடங்கிய ஆய்வு குழு முதல்கூட்டம் ஜனவரி மாதம்
x
அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாக பிரிப்பதற்காக அரசு அமைத்த ஆய்வு குழுவின் முதல்கூட்டம் ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், தங்கமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகியோர் ஆய்வு குழுவில் இடம்பெற்றுள்ளனர். அண்ணா பல்கலையை இரண்டாக பிரிப்பதில் உள்ள சாதக, பாதகமான சூழலை ஆய்வு செய்து இந்த குழு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. அடுத்த மாதம் 6ஆம் தேதி தமிழக சட்டமன்றம் கூட உள்ளதால், அதற்கு முன்னதாகவே இந்த ஆய்வு குழு ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்