மீளும் குட்டி சிங்கப்பூர் - சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் தனுஷ்கோடி

ராமேஸ்வரம் தீவுக்குள் குட்டி சிங்கப்பூராக இருந்த தனுஷ்கோடி, மீண்டும் தூங்கா நகரமாக மாறி சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.
x
தமிழகத்தில் தீவு என்றால், அது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் தான். அதையும் தாண்டி மெல்லிய கோடாக மாறி எஞ்சி நின்று வரவேற்கிறது தனுஷ்கோடி.  பாம்பன் வழியாக தனுஷ்கோடி வரை சென்ற ரயிலிலும் அங்கிருந்து இலங்கையின் தலைமன்னார் வரை கப்பலிலும் வணிகம் நடைபெற்றுள்ளது. இதன் மூலம், 1964 டிசம்பர் 23ஆம் தேதி வரை வர்த்தக நகராக இருந்த தனுஷ்கோடி புயலின் கோர பிடியில் சிக்கி இந்திய வரைபடத்தில் இருந்து உள்வாங்கிக் கொண்டது. எனினும் ஊர் பாசத்தால் அங்கேயே சிலர் வாழ்ந்தனர். இதனிடையே சாலை அமைக்கப்பட்டதை தொடர்ந்து உள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. 

உயர எழும் அலையும், கடலின் தூய்மையும், அவர்களை ஆராதிக்கின்றன. எச்சமாக நின்று வரலாறு சொல்லும் தேவாலயம், ரயில் நிலையம், அஞ்சலகம், உருக்குலைந்த மாளிகைகளின் எச்ச​ங்களை பார்த்து வியக்கின்றனர் சுற்றுலாப் பயணிகள்.

புயலின் போது சென்ற ரயில், அதில் சென்ற பயணிகளின் நிலை இன்றுவரை யாரும் அறியாதது. கால ஓட்டத்தில்  சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ள தனுஷ்கோடி மூலம் பொருள் விற்பனையிலும், பிறமொழி கற்றலும் நடைபெறுகிறது. மின்வசதி, கழிவறை, புதிய வீடுகள் கட்டுதல் போன்றவை தேவையாக இருக்கிறது முந்தைய குட்டி சிங்கப்பூருக்கு....


Next Story

மேலும் செய்திகள்