பொதுமக்கள் ஆவணங்கள் மூலம் போலி நிறுவனங்கள் : திடீர் சோதனையில் அம்பலமான மோசடி

சரக்கு மற்றும் சேவை வரித்துறை புலனாய்வு அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் சிக்கிய நபர்கள், சுமார் 900 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் ஆவணங்கள் மூலம் போலி நிறுவனங்கள் : திடீர் சோதனையில் அம்பலமான மோசடி
x
சரக்கு மற்றும் சேவை வரி துறையின் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடந்த 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் திடீர் சோதனை மேற்கொண்ட போது, சுமார் 900 கோடி ரூபாய் அளவிற்கு, போலி கம்பெனிகள் மூலம் பரிவர்த்தனைகள் நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த போலி கம்பெனிகள் மூலம் சுமார் 150 கோடி ரூபாய் பல்வேறு கம்பெனிகளுக்கு பரிவர்த்தனை செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்செயலில் மூளையாக செயல்பட்டவரிடம்  நடத்தப்பட்ட விசாரணையில், லோன் பெற்று தருவதாக கூறி, பொதுமக்களிடமிருந்து ஆதார் அட்டை மற்றும் பான் அட்டைகளை பெற்று கொண்டு, அதன்மூலம் போலியான நிறுவனங்கள் தொடங்கி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அவரது வீட்டில் இருந்து சுமார் 24 லட்சம் ரூபாய்  பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சரக்கு மற்றும் சேவை வரித் துறை அதிகாரிகள் இதுவரை 3 பேரை கைது செய்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்