"ஊரக உள்ளாட்சி தேர்தல் : 21 வயதே ஆகும், இளம் வயது ஆண் வேட்பாளர்"

கோவையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில், 21 வயதே ஆகும் இளம் ஆண் வேட்பாளர் களமிறங்கியுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
x
கோவை நீலம்பூர் ஊராட்சி மூன்றாவது வார்டு பகுதியை சேர்ந்தவர் நாகர்ஜுன். கோவையில் தனியார் கல்லூரியில் முதுகலை இதழியல் படித்து வரும் இவர், நீளம் பேரூராட்சிக்குட்பட்ட, மூன்றாவது வார்டு பகுதியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார். இவருக்கு தமிழக தேர்தல் ஆணையம் சீப்பு சின்னத்தை வழங்கியுள்ளது. இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இளம் வயது ஆண் வேட்பாளர் என்ற தகுதியை நாகர்ஜுன் பெற்றுள்ளார்.
 
இது குறித்து தெரிவித்த அவர், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 21 வயது தான் அடிப்படை வயது என்றும், ஆனால் அது பலருக்கும் தெரிவதில்லை என்றும், இளைஞர்கள் இதை பற்றி அறிய வேண்டும் என்றும் தெரிவித்தார். கடந்த ஒரு ஆண்டாக ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆய்வு செய்து வருவதாகவும், தம்மைப் போல இளைஞர்கள் தங்களது பகுதியில் அரசியலில் களமிறங்கி, மக்களின் குறைகளை அறிய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

நாகர்ஜூன், அவரது பகுதி மக்களின் குறைகளை கேட்டறிய செயலி ஒன்றை உருவாக்கியுள்ளதாகவும், இதை தமிழகம் முழுவதும் அரசு மூலம் கொண்டு செல்ல விரும்புவதாகவும் தெரிவித்தார். அரசு அனுமதி கொடுக்கவில்லை எனில், தனது பகுதிக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் பயன்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த செயலி மூலம் மக்கள் தங்களது குறைகளை எளிமையாக தெரிவிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்