வேலூரில், தேவாலய வாசலில் அனாதையாக கிடந்த குழந்தை : போலீசார் விசாரணை

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தேவாலய வாசலில் பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை மீட்ட போலீசார், பச்சிளம் குழந்தையை அனாதையாக விட்டுச்சென்றது யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூரில், தேவாலய வாசலில் அனாதையாக கிடந்த குழந்தை : போலீசார் விசாரணை
x
வேலூர் மாவட்டம் எருக்கம்பட்டு கிராமத்தில் உள்ள  பெத்தேல் சர்ச்-ல்  இருந்து நேற்று அதிகாலை குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்த போது, பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை தொப்புள் கொடி கூட அகற்றப்படாத நிலையில் கிடந்துள்ளது. இதனை அடுத்து குழந்தையை மீட்ட பொது மக்கள் அதிர்ச்சியடைந்த பொது மக்கள் மேல பாடி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையை மீட்டு  சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொட்டும் பணியில்  பச்சிளம் குழந்தையை அனாதையாக விட்டுச் சென்றது யார்  என மேல்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். Next Story

மேலும் செய்திகள்