நெல்லை : பாசன குளத்திற்குள் முதலை வந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல்
நெல்லை மாவட்டம் நொச்சிகுளம் கிராமத்தில் உள்ள பாசன குளத்திற்கு மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் வரும்போது முதலை வந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நெல்லை மாவட்டம் நொச்சிகுளம் கிராமத்தில் உள்ள பாசன குளத்திற்கு மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் வரும்போது முதலை வந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் குளத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், முதலையை பிடிக்கும் பணியில் பணியில் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் படகு மூலம் தீவிர தேடுதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் நடுவில் அமைந்துள்ள குளத்தில் முதலை இருப்பதாக வந்த தகவலை அடுத்து பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
Next Story

