லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்ட 21 டன் வெங்காயம் - தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர விசாரணை
நாகை மாவட்டம் சீர்காழி அருகே 21 டன் வெங்காயத்துடன் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
திட்டை ரோட்டில் தனிவட்டாட்சியர் பிரேம்சந்திரன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி ஆய்வு செய்துள்ளனர். அப்போது அந்த லாரியில் உரிய ஆவணம் இன்றி மகாராஷ்டிராவில் இருந்து 21 டன் வெங்காயம் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து லாரியுடன் வெங்காயத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வெங்காயம் கொண்டு வரப்பட்டதா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story