"நீராவி முருகனிடம் போலீசார் தீவிர விசாரணை" - சக்தி கணேஷ் - ஈரோடு மாவட்ட எஸ்.பி

ஆள்கடத்தல் வழக்கில் வள்ளியூரில் கைது செய்யப்பட்ட நீராவி முருகன், ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.
x
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே விவசாயி சக்திவேல் என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு மர்ம கும்பலால் கடத்தப்பட்டார். இதுதொடர்பாக நீராவி முருகன் உள்ளிட்டோரை ஈரோடு தனிப்படை போலீசார் தேடி வந்தனர். ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நீராவி முருகன் உள்ளிட்ட இருவர் வள்ளியூரில் பதுக்கி இருப்பதாக தனிப்டை போலீசாருக்கு  தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் நீராவி முருகனை மடக்கி பிடித்தனர். அப்போது போலீசாரை அவன் தாக்க முயன்றதால் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இந்நிலையில், வள்ளியூரில் இருந்து ஈரோடு அழைத்து  வரப்பட்ட நீராவி முருகன் மற்றும் அவனது கூட்டாளியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீராவி முருகன் மீது ஆட்கடத்தல் , வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக ஈரோடு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் தெரிவித்ததார். 

Next Story

மேலும் செய்திகள்