கோயில் நிலங்களில் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கும் அரசாணை : உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை

கோயில் நிலங்களில் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கும் அரசாணைக்கு தடை விதிக்க கோரிய வழக்கை ரத்து செய்ய தமிழக அரசு கோரிக்கை.
x
அரசு புறம்போக்கு மற்றும் கோவில்  நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கும் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக்கோரி, ராதா கிருஷ்ணன், சத்தியநாராயணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அந்த அரசாணைக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த தடையை நீக்க கோரி, தமிழக வருவாய் துறை தரப்பில் கூடுதல் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் உள்ள 4.78 லட்சம் ஏக்கர் கோவில் நிலங்களில் 600 ஏக்கர் மட்டும் 20 ஆயிரம் ஏழை குடும்பத்தினருக்கு பட்டா வழங்க பயன்படுத்தப்படும் என்று வருவாய் துறை தெரிவித்துள்ளது. விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.



Next Story

மேலும் செய்திகள்