போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயற்சி : இலங்கை அகதி கைது
மதுரையில், போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரையில், போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்றவரை போலீசார் கைது செய்தனர். இலங்கை குடியுரிமை பெற்ற ராபின்ராபட் என்பவர் கடந்த 1983 ஆண்டு முதல் ராமநாதபுரம் அகதிகள் முகாமில் தங்கி வருகிறார். கவிதா என்பவரை திருமணம் செய்து கொண்ட ராபின்ராபட் , ஆதார் அட்டை பெற்று தான் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் என்று குறிப்பிட்டு பாஸ்போர்ட் பெற்றுள்ளார். இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில், குடியேற்றத்துறை அதிகாரிகள் விசாரணையில் வசமாக சிக்கிய ராபின் மீது போலீஸ் வழக்குபதிவு செய்தனர்.
Next Story

