பிட்காயின் முதலீடு என்று கூறி மோசடி : நடவடிக்கை எடுக்கக் கோரி பெண் புகார்

தர்மபுரியில், பிட்காயின் பெயரில் 37 சவரன் மோசடி செய்த நபர் மீது, நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பிட்காயின் முதலீடு என்று கூறி மோசடி : நடவடிக்கை எடுக்கக் கோரி பெண் புகார்
x
தர்மபுரி நகர காவல் ஆய்வாளர் ரத்தினகுமாரிடம், பாதிக்கப்பட்ட பெண் செல்வி புகார் அளித்துள்ளார். அந்த மனுவில், மகாலிங்கம் என்பவர் பிட்காயினில் முதலீடு செய்தால், எட்டு மாதங்களில் மூன்று மடங்கு பணம் கிடைக்கும் என்று கூறி தன்னிடம் 37 சவரன் நகையை பெற்று ஏமாற்றிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். தாம் இழந்த பணத்தை அவரிடம் இருந்து பெற்று தர வேண்டும் என மனுவில் செல்வி கேட்டுக்கொண்டுள்ளார். இதையடுத்து பேசிய ஆய்வாளர் ரத்தினகுமார், மோசடி நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். திருச்சி, புதுக்கோட்டை, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை தொடர்ந்து, பிட்காயின் மோசடி தர்மபுரி நகரில் அரங்கேறியிருப்பது, மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்