நாசாவுக்கு செல்ல அரசுப் பள்ளி மாணவி தேர்வு : மாணவிக்கு குவிந்த உதவித் தொகை

அமெரிக்க விண்வெளி நிறுவனமான 'நாசாவை சுற்று பார்க்க புதுக்கோட்டையை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி ஒருவர் தேர்வாகியுள்ளார்.
x
புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஜெயலட்சுமி. இந்த மாணவி தனியார் தொண்டு  நிறுவனம் ஒன்று நடத்திய விண்வெ ளி குறித்த ஆன்லைன் தேர்வில் கலந்து கொண்டார். இதில்  அவர் இரண்டாம் இடத்தை பிடித்து தேர்வாகி உள்ளார். இதனைத்தொடர்ந்து அந்த தனியார் தொண்டு நிறுவனம் அவரை விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா விற்கு அழைத்துச் செல்ல உள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால் அமெரிக்காவுக்கு செல்ல மாணவியிடம் பணம் இல்லை என்று தகவல் வெளியானதை அடுத்து பல்வேறு அமைப்பினர் சார்பில் அவருக்கு நன்கொடைகளை அளித்து வருகின்றனர். குறிப்பாக ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் 67 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி முன்னிலையில் அந்த மாணவியிடம் அந்த நிறுவனம் ஒப்படைத்தது. 


Next Story

மேலும் செய்திகள்