"பாஸ்ட்டேக் திட்டத்தை செயல்படுத்துவதில் மும்முரம்" - போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார்

மத்திய அரசு அறிவித்த காலகெடுவிற்கு முன்பே சுங்கசாவடிகளில் பாஸ்ட்டேக் திட்டத்தை அமல்படுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.
பாஸ்ட்டேக் திட்டத்தை செயல்படுத்துவதில் மும்முரம் - போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார்
x
தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் சுங்க கட்டணம் செலுத்த வசதியாக பாஸ்ட் டேக் திட்டம் நாடு முழுவதும் கடந்த 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவித்த நிலையில்,  கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.  இந்த நிலையில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நல்லூர் சுங்கச்சாவடியில்  தலா 7 கவுண்டர்கள் உள்ள நிலையில்,  4 கவுன்ட்டர்கள் பாஸ்ட்டேக் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.  3 கவுண்டர்கள் வழியாக மட்டுமே பணம் கொடுத்து செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஜனவரி 15ஆம் தேதி வரை கால அவகாசம் அளித்துள்ள நிலையில், முறையாக பராமரிக்கப்படாத இந்த சாலையில், அடியாட்கள் உதவியுடன் கட்டண வசூல் நடைபெறுவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.  


Next Story

மேலும் செய்திகள்