குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம்
x
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூரில் இரண்டு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியார் பெண்கள் கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்திலேயே அமர்ந்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் தேவனாம்பட்டினத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரி மாணவர்களும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதாகைகளுடன் நாகர்கோவிலில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் 

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவிலில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 


இதில், வகுப்புகளை புறக்கணித்து, கையில் பதாகைகளுடன் மாணவர்கள், முழக்கங்கள் எழுப்பினர். கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள் வெளியேறினர்.

வாணியம்பாடி கல்லூரி மாணவர்கள் போராட்டம் 

வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரி மற்றும் ஆம்பூர்  மஜறுலூம் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 




கல்லூரி வாயிலில் அமர்ந்து குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று முழக்கமிட்டனர். 

திருச்சியில் மாணவர்கள் ரயில் மறியலில் ஈடுபட முயற்சி

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி திருச்சியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். 




மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு ரயிலை மறிக்க முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். 

கும்பகோணத்தில் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

கும்பகோணத்தில் அரசினர் கலைக்கல்லூரி மாணவர்கள் மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 




இதைத்தொடர்ந்து, கல்லூரி வாயிலில்  பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.









Next Story

மேலும் செய்திகள்