"சிறுபான்மையினரின் உரிமைகளை காக்க உறுதியேற்போம்" - திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி

குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் ஒடுக்கப்படும் சிறுபான்மையினரின் உரிமைகளை காத்திட உறுதியேற்போம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிறுபான்மையினரின் உரிமைகளை காக்க உறுதியேற்போம் - திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி
x
குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் ஒடுக்கப்படும் சிறுபான்மையினரின் உரிமைகளை காத்திட உறுதியேற்போம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சர்வதேச சிறுபான்மையினர் உரிமைகள் தினத்தையொட்டி, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இதனை அவர் தெரிவித்துள்ளார். மேலும், சமூகநீதி, சமத்துவத்தை அடிப்படையாக கொண்ட திராவிட இயக்கத்தின் உயரிய நோக்கங்களில் ஒன்று, சிறுபான்மையினர் உரிமைகளையும், நலன்களையும் பாதுகாப்பது என குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், மத, இன, மொழி, பாலினம் என, எந்த வகையிலான சிறுபான்மையினராக இருந்தாலும், அவர்தம் உரிமைகளுக்கு ஏற்படும் ஆபத்திலிருந்து, பாதுகாப்பது நமது கடமை என்றும் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்