தொழிலதிபரிடம் 1 கோடி ரூபாய் கேட்டு மிரட்டல் : எம்.எல்.ஏ, சேகர்பாபு மீது வழக்கு பதிவு
தொழிலதிபரிடம் 1 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாக சேகர்பாபு எம்.எல்.ஏ உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
தொழிலதிபரிடம் 1 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாக சேகர்பாபு எம்.எல்.ஏ உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை, பெரியமேட்டைச் சேர்ந்த தொழிலபதிபர் ராஜ்குமார் ஜெயின் என்பவர், நீதிமன்றம் மூலம் ஏலத்திற்கு வந்த அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியுள்ளார். அங்கு வசித்தவர்கள் வீடுகளை காலி செய்த நிலையில், ஒருவர் மட்டும் காலி செய்யாமல் இருந்துள்ளார். இந்த விவகாரத்தில், சேகர்பாபு தலையிட்டு ராஜ்குமார் ஜெயினிடம் ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ராஜ்குமார் ஜெயின், நீதிமன்றத்தில் முறையிட்டதன் பேரில், சேகர்பாபு உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story

