"ஸ்டாலின் ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளை கூற வேண்டும்" - அமைச்சர் எஸ்பி.வேலுமணி

திமுக தலைவர் ஸ்டாலின் ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளை கூற வேண்டும் என்றும், தம் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலக தயாராக இருப்பதாகவும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளை கூற வேண்டும் - அமைச்சர் எஸ்பி.வேலுமணி
x
மாநகராட்சி கட்டுமான பணிகளில் எம் சாண்ட் பயன்படுத்துவது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளதை அவர் குறிப்பிட்டுள்ளார். மாநகராட்சி பணிகள் முறையாக ஆன்லைன் மூலம் ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட்டு விதிகளுக்கு உட்பட்டே நடைபெறுவதாகவும்  அவர் கூறியுள்ளார். இணையதளத்தின் வாயிலாக தகவல் எடுக்கும் போது பல்வேறு நகரங்களில் எம் சாண்ட் சந்தை விலை ஒரு கன மீட்டருக்கு ஆயிரத்து 130 ரூபாய் முதல் ஆயிரத்து 943 ரூபாய் வரை உள்ளதாக எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார். பொதுப்பணித்துறை அளித்துள்ள விலைப்பட்டியல் ஆயிரத்து 250 ரூபாய் என்றும், எனவே வெளிச்சந்தை விலையும் பொதுப்பணித்துறை விலையும் ஒன்றாக உள்ளதாகவும், எம் சாண்டை பயன்படுத்தி பணிகளை மேற்கொண்டதால் பெருநகர மாநகராட்சிக்கு எந்த நிதி இழப்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலை எப்படியாவது தடுத்து நிறுத்தி விட வேண்டும் என்ற எண்ணத்துடன் நீதிமன்றத்திற்கு சென்று தோல்வி அடைந்ததால் அதை மறைக்கும் முயற்சியில் ஸ்டாலின் ஈடுபட்டுள்ளதகாவும் அவர் குறிப்பிட்டுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் ஆதாராத்துடன் குற்றச்சாட்டுகளை கூற வேண்டும் என்றும், குற்றச்சாட்டுகளை  நிரூபித்தால் ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாகவும் எஸ்பி.வேலுமணி தெரிவித்துள்ளார். இல்லையெனில் ஸ்டாலின் ராஜினாமா செய்ய தயார என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்