ஒசூர் சுற்றுப்பகுதியில் சுற்றித் திரியும் 80 காட்டு யானைகள்

ஒசூர் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் இன்று மீண்டும் ஓசூர் சானமாவு வனப்பகுதிக்கு திரும்பின.
x
ஒசூர் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் இன்று மீண்டும் ஓசூர் சானமாவு வனப்பகுதிக்கு திரும்பின. கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து வெளியேறிய 100க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் ஒசூர் சானமாவு வனப்பகுதிக்கு வந்தன. அங்கிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு, தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு இந்த யானைகள் விரட்டப்பட்டன. இந்நிலையில் 50க்கும் மேற்பட்ட யானைகள் மீண்டும் சானமாவு பகுதிக்கு திரும்பின. ஒசூர் சானமாவு சுற்றுப்புற வனப்பகுதிகளையும் சேர்த்து, ஒட்டு மொத்தமாக 80 யானைகள் முகாமிட்டுள்ளதால், மக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்